கலைவாணர் அரங்கம்

ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

வணக்கம்!

கலைவாணர் அரங்கம் இந்திய சுதந்திரத்திற்குப் பின் 1951 - 1952ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 02.05.1952 அன்று திறந்து வைக்கப்பட்டு, சட்டமன்றமாக இயங்கி வந்தது. 1957 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் குழந்தைகள் அரங்கமாக மாற்றப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 1967ஆம் ஆண்டு 'பாலர் அரங்கம்' என்ற பெயரில் சிறுவர் அரங்கமாக மாற்றப்பட்டது. 29.01.1974 அன்று "கலைவாணர் அரங்கம்" என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது.

சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் கலைவாணர் அரங்கம் நவீன முறையில் கட்டப்பட்டு 14.02.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்தக் கலையரங்கத்தில் மூன்று தளங்கள் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கலையரங்கமாகவும், திரைப்பட அரங்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் 1024 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வசதியும், மூன்றாவது தளத்தில் 1300 பேர் அமரக் கூடிய வகையில் பல்நோக்கு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் மூன்று தளங்களுக்கும் சென்று வர, நகரும் படிக்கட்டு மற்றும் மின்ாக்கி வசதியும் உள்ளது.

நன்றி! வணக்கம்.