திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய திருக்குறள் இன்றளவும் மனிதனை அறநெறியில் வழிநடத்துகிறது. சாதி, மதம் , பேதம் இந்த மூன்றையும் கடந்த நூலாய் திருக்குறள் உள்ளது.
தமிழகத்தின் தனி பெருந்தலைவராக, இந்திய திருநாடே வியந்து போற்றும் மிகச் சிறந்த அரசியல் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார். ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளுக்கு ஏற்ப உலகெங்கும் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருப்பவர்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டை தமிழக மக்களிடையே விதைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிகுந்த பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல்வாதியாகவும் , உத்தம தலைவராகவும் திகழ்ந்தார்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டு சாதி ஒழிப்பு , பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்காக தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள்.