நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம்

அடையாறு

வணக்கம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் இணையர்க்கு 01.01.1928 அன்று மகனாகப் பிறந்தார்.

'நடிப்புதான் தனது மூச்சு என்றும், நடிப்புதான் தனக்குத் தெரிந்த தொழில் என்றும், நடிப்புதான் தனக்குத் தொழில்' என்றும் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு, அதற்கேற்ப வாழ்ந்தும், நடிப்பிலே உச்சம் தொட்டும் உலகப் புகழ் பெற்றவர் நடிகர் திலகம் ஆவார். சிறுவயது முதற்கொண்டு நடிப்பதில் பேரார்வம் கொண்டு பல்வேறு நாடகக் குழுக்களில் நடித்து வந்தார். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் எழுதப்பட்ட 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் திறமையைக் கண்டு வியந்த தந்தை பெரியார் அவர்களால் சிவாஜி கணேசன் என்று பெயர் சூட்டப்பெற்றார்.

பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதா சாகேப் பால்கே விருது ஆகிய உயரிய விருதுகளைப் பெற்றார்.

உலகப்புகழ் பெற்று உச்சம் தொட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 21.07.2001 அன்று இயற்கை எய்தினார். அன்னாருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 2006ஆம் ஆண்டு அவருடைய நினைவு நாளில் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. சென்னை அடையாற்றில் மணிமண்டபமும் அமைக்கப்பட்டு 01.10.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த அக்டோபர்த் திங்கள் 1ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் இணையர்க்கு 01.01.1928 அன்று மகனாகப் பிறந்தார்.