மகாகவி பாரதியார் மணிமண்டபம்

எட்டயபுரம்

வணக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சின்னசாமி ஐயர் இலட்சுமி அம்மாள் இணையர்க்கு மகனாக 11.12.1882 அன்று பிறந்தார்.

"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன். அவனே கவி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று உரைத்தார் பாரதி.

தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பன்மொழிப் புலமை பெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்த கவிஞாயிறு.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி, தேசிய கவியாகப் போற்றப்படுகிறார்.

பெண்களின் கல்வியறிவுக்காகவும், சட்டங்களைச் செய்திடவும், கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதி படைக்கவும் பெண்கள் தகுதி படைத்தவர்கள் என்று கண்டார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, 11.12.1981 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.

மகாகவி பாரதியார் மணிமண்டபம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சின்னசாமி ஐயர் இலட்சுமி அம்மாள் இணையர்க்கு மகனாக 11.12.1882 அன்று பிறந்தார்.