விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம்

விருப்பாச்சி

வணக்கம்!

விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர் கோபால் நாயக்கர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் வீரைய்யா நாயக்கர்-காமாட்சி அம்மாள் இணையர்க்கு 14.01.1728 அன்று மகனாகப் பிறந்தார்.

தங்கள் மண்ணின் மக்களைக் காக்க பூலித்தேவன், தீரன் சின்னமலை, அழகு முத்துக்கோன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட பாளையக்காரர்கள் வரி கொடுக்க மறுத்து, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தனர். திண்டுக்கல் சீமைப் பாளையக்காரர்களைக் கோபால் நாயக்கர் ஒருங்கிணைத்து வலுவான புரட்சிக் கூட்டணியை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட போரில், முதன்முறையாகக் கொரில்லா முறையிலான தாக்குதலை மேற்கொண்டார். வேலுநாச்சியாரின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் கோபால் நாயக்கரைச் சிறைபிடிக்க பலமுறை போர் தொடுத்தும் பலனின்றிப் போனது.

ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்ட கோபால் நாயக்கர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு 1801ஆம் ஆண்டு விருப்பாச்சிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். உயிர்விடும் தருவாயிலும்கூட கிஞ்சிற்றும் கலங்காமல் "என்னைப் போல் கோடி மக்கள் கூடி இந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வேரோடு அழிப்பார்கள் இது உறுதி" என வீர முழக்கமிட்டார்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய விடுதலைப் போராட்ட வீரரும், வரலாற்று நாயகருமான கோபால் நாயக்கர் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் 20.02.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது நினைவு நாளான செப்டம்பர்த் திங்கள் 5ஆம் நாளை அரசின் சார்பில் அனுசரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

நன்றி! வணக்கம்.

விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம்

விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர் கோபால் நாயக்கர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் வீரைய்யா நாயக்கர்-காமாட்சி அம்மாள் இணையர்க்கு 14.01.1728 அன்று மகனாகப் பிறந்தார்.