ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மணிமண்டபம்

அடியனூத்து

வணக்கம்!

ஹைதர் அலி

ஹைதர் அலி, கருநாடக மாநிலம், மைசூருவில் உள்ள பூதிக்கோட்டையில் 1722ஆம் ஆண்டு பதேமுகம்மது - மஜீதா பேகம் இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.

1758ஆம் ஆண்டு மராத்தியர்கள் மைசூருவைக் கைப்பற்ற முனைந்தபோது ஹைதர் அலி தளபதியாக நியமிக்கப்பட்டார். 1761ஆம் ஆண்டு மைசூருவின் நிகரற்ற ஆட்சியாளராக ஆனார்.

ஆங்கிலேயருக்கு எதிராகத் தன் மகன் திப்புசுல்தானுடன் ஒரு பெரும் படையைத் திரட்டி மெட்ராசை நோக்கிப் புறப்பட்டார். இதனால் ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியுடன் சமரச ஒப்பந்தம் செய்து கொள்ளச் சம்மதித்தனர். 1778-ஆம் ஆண்டுக்குப் பின் விரிந்து பரந்த சாம்ராஜ்ஜியத்தின் மன்னராகவும் ஹைதர் அலி திகழ்ந்தார்.

ஆங்கிலேயருக்கு எதிராக வீரத்துடன் போராடி அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்தவர் ஹைதர் அலி.

திப்புசுல்தான்

திப்புசுல்தான், கருநாடக மாநிலம், தேவனஹள்ளியில், 20.11.1750 அன்று ஹைதர் அலி - பார்த்திமா இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.

தந்தை ஹைதர்அலி மறைவுக்குப் பிறகு 1782ஆம் ஆண்டு நவாப் திப்புசுல்தான் பகதூர் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். 1782ஆம் ஆண்டு முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்தார். ஆங்கிலேயருக்கு எதிராகத் துணிச்சலுடனும், தீரத்துடனும் போரிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், அடியனுாத்து கிராமத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகியோர் நினைவாக, ஒரே வளாகத்தில் மணிமண்டபம் 31.12.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.