பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி மணிமண்டபம்

உடுமலைப்பேட்டை

வணக்கம்!

'பகுத்தறிவுக் கவிராயர்' உடுமலை நாராயணகவி அவர்கள் 25.9.1899 அன்று கிருஷ்ணசாமி, முத்தம்மாள் இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.

இவர் சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். தனது சீர்திருத்தப் பாடல்களால் புகழ்பெற்று 'நாராயணகவி' என்று பெயர் சூட்டிக் கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர்.

தொடக்கத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப் பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், சமுதாயப் பாடல்களையும், புரட்சிக் கனல் மிகுந்த விடுதலைக் கவிதைகளின் வாயிலாகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற திரைப்படங்களுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கதை வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்திற்குப் பாடல்களையும் எழுதியவர்.

திராவிட இயக்கத் தலைவர்களாம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருடன் உற்ற நட்புக் கொண்டிருந்த ‘பகுத்தறிவுக் கவிராயர்' 23.05.1981 அன்று மறைந்தார். அன்னாரின் நினைவாக 31.12.2008 அன்று அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில், திருப்பூர் உடுமலைப் பேட்டையில் பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி மணிமண்டபம் 23.02.2001 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த செப்டம்பர்த் திங்கள் 25ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி மணிமண்டபம்

'பகுத்தறிவுக் கவிராயர்' உடுமலை நாராயணகவி அவர்கள் 25.9.1899 அன்று கிருஷ்ணசாமி, முத்தம்மாள் இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.