மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபம்
சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, கிண்டி
வணக்கம்!
தமிழ்மொழிக்காகத் தன்னுயிர் நீத்த தியாகச் செம்மல்களின் தொண்டினைப் போற்றி நினைவுகூர்கின்ற வகையில், சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் இம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக மறைந்த மொழிப்போர்த் தியாகிகளின் ஒளிப்படங்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபம் 25.01.2001 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சுத் திங்கள் 25ஆம் நாளை மொழிப்போர்த் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நன்றி! வணக்கம்.