தமிழிசை மூவர் மணிமண்டபம்

சீர்காழி

வணக்கம்!

முத்துத்தாண்டவர் (கி.பி. 1525 - 1625)

சீர்காழி முத்துத்தாண்டவர் சோழநாட்டில் சீர்காழி சிவதலத்தில் பிறந்தார். முத்துத்தாண்டவர் தில்லை நடராஜப் பெருமானுக்குத் தம்முடைய கீர்த்தனைகளையும் பதங்களையும் அர்ப்பணித்து அப்பெருமானோடு இரண்டறக் கலந்துவிட்டார். இவர் பாடிய பல நூறு கீர்த்தனங்களில் 80 கீர்த்தனங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இன்றைய கீர்த்தனம்-கிருதி- மரபுக்குப் பிதாமகன் என்று சொல்லத்தக்கவர் சீர்காழி முத்துத்தாண்டவர். சிதம்பரம் நடராசப் பெருமான் மீது அளவில்லாத கீர்த்தனங்களும், பதங்களும் பாடியவர்.

மாரிமுத்தாப்பிள்ளை(கி.பி. 1712 - 1787)

முத்துத்தாண்டவரைப் போலத் தில்லை நடராஜப் பெருமான் மீது பல கீர்த்தனங்களும், பதங்களும், பாடிய மற்றொரு இசைவாணர் தில்லை விடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர் வரிசையில் எண்ணத்தக்க வகையில் இவரும் ஒருவர். சிதம்பரத்துக்கு அருகே உள்ள தில்லை விடங்கன் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் பாடிய 25 கீர்த்தனங்கள் 17 ராகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவர் பாடிய வருணபுரி குறவஞ்சியில் 170 பாடல்கள் உள்ளன.

அருணாச்சலக் கவிராயர் (கி.பி. 1711 –1779)

அருணாச்சலக் கவிராயர் தில்லையாடி என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் தமது 60ஆவது வயதில் இராமநாடகக் கீர்த்தனையைப் பாடியுள்ளார். இராம சரித்திரத்தைக் கீர்த்தனையாகப் பாட ஆரம்பித்தார். அப்படி அமைக்கப்பட்ட பாடல்களில் தமிழ்நாட்டில் இக்கீர்த்தனங்களைப் பாடாத இசைவாணர்களே இல்லை.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழிசை மூவர் மணிமண்டபம் 20.02.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.