உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம்

வையம்பாளையம், கோயம்புத்தூர்

வணக்கம்!

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் கோயம்புத்துார் மாவட்டம், அவிநாசி, வையம்பாளையத்தில் சின்னம்ம நாயுடு - அரங்கநாயகி இணையர்க்கு 06.02.1925 அன்று மகனாகப் பிறந்தார்.

சிறுவயது முதற்கொண்டே உழவுத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் களத்திலே விவசாயிகள் படுகின்ற துயரங்களைக் கண்டு வேதனையுற்று அதனைக் களைந்திடும் விதமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி விவசாயிகளுக்காகப் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்தார். 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை வட்ட உழவர் இயக்கம் 1967இல் மாவட்ட அளவிலும், 1973இல் மாநில அளவிலும் தமிழக விவசாயிகள் சங்கமாகக் கட்டமைத்துப் பல்வேறு போராட்டங்களை நடத்திச் சிறைவாசம் கண்டு பின்னர் இந்திய அளவில், உழவர்களை ஒருங்கிணைக்கும் அரிய முயற்சியில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.

அன்னாரின் பேச்சுத் திறன், தலைமைப் பண்பு விவசாயிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட ஆற்றல்களால் விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகச் சிறந்து விளங்கினார். இன்றைக்கும் பல்வேறு விவசாய அமைப்புகளாலும், விவசாயிகளாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் 21.12.1984 அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில், தமிழ்நாடு அரசால் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் 06.02.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த பிப்ரவரித் திங்கள் 6ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம்

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் கோயம்புத்துார் மாவட்டம், அவிநாசி, வையம்பாளையத்தில் சின்னம்ம நாயுடு - அரங்கநாயகி இணையர்க்கு 06.02.1925 அன்று மகனாகப் பிறந்தார்.