ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்

ஓமந்தூர்

வணக்கம்!

எளிமையின் சின்னமாகச் சிறந்த காந்தியவாதியாக, அப்பழுக் கற்றவராகத் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம். ஓமந்தூரில் 01.02.1895 அன்று முத்துராம் ரெட்டியார் அரங்கநாயகி இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.

உழைப்பு. நேர்மை, கண்டிப்பு, கட்டுப்பாடு, விவசாயத்தில் ஆர்வம், சிக்கனம், சுயதேவைப் பூர்த்தி, சன்மார்க்கம், நீதி தவறாமை ஆகியன இவரது குறிக்கோள்களாகும். அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, காங்கிரசில் இணைந்து தன் அயராத உழைப்பால் பல்வேறு பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றி, 1938இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், 1947இல் சென்னை ராஜதானியின் முதலமைச்சராகவும் திறம்பட பணியாற்றிய காலத்தில், சென்னை ஆலய நுழைவு அதிகாரச் சட்டமளிப்பு இயற்றப்பட்டதன் காரணமாக, இந்து ஆலயங்களில் தலித்துகளும், தாழ்த்தப்பட்டோரும் சென்று வழிபட்டனர். மேலும், ஆலய சொத்துகளைத் தடுக்க சட்டம், ஜமீன்தார் இனாம் முறை ஒழிப்பு, பூரண மதுவிலக்கு மற்றும் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை ஆகியவற்றைத் திறம்பட செயற்படுத்தினார்.

ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும், ஆன்மிகத்தில் கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரணமாக, அரசியலில் இருந்து விலகி, வடலூரில் வள்ளலார் பெயரில் சன்மார்க்க நிலையத்தை நிறுவி, அப்பர் அனாதை ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்கத் தொண்டர் இல்லம், வள்ளலார் குருகுலம் உயர்நிலைப் பள்ளி, ஓ.பி.ஆர். பண்ணை, சித்தலிங்கமடம் ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி, ஆன்மீகப் பணியில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஓமந்தூரார் 25.08.1970 அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஓமந்தூர் கிராமத்தில் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம் 20.02.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த பிப்ரவரித் திங்கள் 1ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.