இராமசாமி படையாச்சியார் மணிமண்டபம்
மஞ்சக்குப்பம்
வணக்கம்!
சமூகநீதிக்காகப் பாடுபட்டவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இராமசாமி படையாட்சியார் அவர்கள் கடலுார் மாவட்டத்தில் சிவசிதம்பரம் படையாட்சி-ரெத்தினம்மாள் இணையர்க்கு 16.09.1918 அன்று மகனாகப் பிறந்தார்.
சிறுவயது முதற்கொண்டே சமுதாயப் பணிகளில் மிகுந்த நாட்டம் கொண்டு, அதன் தொடர்ச்சியாக உழைப்பாளர் கட்சியைத் தொடங்கிப் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், தான் சார்ந்த சமுதாய மக்களின் சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடினார். 1952ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், 1980 ஆண்டு மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களைவை உறுப்பினராகவும், பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றினார். வன்னியர் சமுதாயத்திற்கு மாநிலத்திலும் மத்தியிலும் இடஒதுக்கீடு வேண்டுமென்று இறுதிவரை போராடினார்.
மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், கடலுார் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் இராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் 25.11.2019 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் திறந்து வைக்கப்பட்டது. அன்னாரின் பிறந்த செப்டம்பர்த் திங்கள் 16ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.