சுவாமி சகஜானந்தா மணிமண்டபம்
சிதம்பரம்
வணக்கம்!
சிறந்த ஆன்மிகவாதியாகவும் சமூக சேவகராகவும் திகழ்ந்த சுவாமி சகஜானந்தா அவர்கள், கடலூர் மாவட்டம் ஆரணி வட்டம், மேல்புதுப்பாக்கத்தில் 27.01.1890 அன்று பிறந்தார்.
இவர் ஆன்மிகவாதி, சமூக சேவகர் மற்றும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். ஏழை மக்கள் உயர்வுபெற தன் வாழ்வை அர்ப்பணித்தவர். மக்களின் அறியாமையைப் போக்கிட கல்வி நிறுவனம் தொடங்கி, மாணவர்கள் கல்வி பயின்றிட வழிவகுத்தவர். அண்ணல் காந்தியடிகளைத் தமிழகம் அழைத்து வந்து அறநெறி பரப்பியவர், 34 ஆண்டுகள் சட்டமன்ற மேலவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றி, பட்டியலின மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தவர் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டவர் சுவாமி சகஜானந்தா ஆவார். சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர் 1959ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் 02.02.2018 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்னாரின் பிறந்த சனவரித் திங்கள் 27ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.