டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்

திருசெந்தூர்

வணக்கம்!

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், ஆதித்தனார் - கோவிந்தம்மாள் இணையர்க்கு 24.8.1936 அன்று மகனாகப் பிறந்தார்.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பள்ளிப் படிப்பைச் சென்னை இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியிலும், பி.ஏ. பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலும் பெற்றார். தமிழ்நாட்டில் ஏராளமான கோவில் திருப்பணிகளையும் சிவந்தி ஆதித்தனார் செய்துள்ளார். விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார்.

சி.பா. ஆதித்தனார் 1942ஆம் ஆண்டு தினத்தந்தி நாளிதழைத் தொடங்கினார். தந்தையைப் பின்பற்றி பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தனார் அவர்களும் ஈடுபட்டார். பத்திரிகைத் துறையில் செய்தியாளர், துணை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பயிற்சி பெற்றவர். 1959 ஆம் ஆண்டு பா. சிவந்தி ஆதித்தனாரிடம் 'தினத்தந்தி'யின் நிருவாகப் பொறுப்பை ஆதித்தனார் அவர்கள் ஒப்படைத்தார்.

பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவைகளைப் பாராட்டி இவருக்கு 1994ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு 2008ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபம் 20.02.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், ஆதித்தனார் - கோவிந்தம்மாள் இணையர்க்கு 24.8.1936 அன்று மகனாகப் பிறந்தார்.