இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம்

சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, கிண்டி

வணக்கம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய்த் திகழ்ந்த இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் கோழியாளம் எனும் கிராமத்தில் இரட்டைமலை ஆதியம்மாள் இணையர்க்கு 07.07.1859 அன்று மகனாகப் பிறந்தார்.

பள்ளியில் படிக்கின்ற காலத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டு அதனைக் களைந்திட வேண்டுமென்று உறுதி கொண்டார். தென்னிந்தியா முழுவதும் சென்று ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிந்து வேதனையுற்று, அம்மக்களைச் சாதியின் கோரப்பிடியில் இருந்து விடுவிக்கவும், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட தன் ஆயுள் முழுதும் அர்ப்பணித்து அயராது பாடுபட்டார். அதன் தொடர்ச்சியாக 1891ஆம் ஆண்டு பறையர் மகாஜன சபை தொடக்கம், பறையர் நாளிதழ் தொடங்கித் தம் கருத்துகளை உறுதியுடன் எடுத்துரைத்தார். 1923 முதல் 1938 வரை சென்னை மாகாணச் சட்டசபையின் உறுப்பினராகத் திறம்பட பணியாற்றினார். 1930-1932இல் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் அண்ணல் அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகப் பங்கேற்றுத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டால்தான் தீண்டாமை ஒழியும் என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

மக்கள் பணி செய்த இவருக்கு ஆங்கிலேய அரசு 1926ஆம் ஆண்டு ராவ் சாகிப், 1930ஆம்ஆண்டு ராவ் பகதூர், 1936ஆம் ஆண்டு திவான் பகதூர் பட்டமும் வழங்கிக் கௌரவித்தது. 1940ஆம் ஆண்டு திராவிட மணி என்ற பட்டமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தொண்டினையும் ஆதித்திராவிடர் சமுதாய அளப்பரிய மக்களின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு எழில்மிகு மணிமண்டபம் அமைக்கப்பட்டு 07.07.2009 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த சூலைத் திங்கள் 7ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம்

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய்த் திகழ்ந்த இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் கோழியாளம் எனும் கிராமத்தில் இரட்டைமலை ஆதியம்மாள் இணையர்க்கு 07.07.1859 அன்று மகனாகப் பிறந்தார்.