தியாகிகள் மணிமண்டபம்
சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, கிண்டி
வணக்கம்!
நம் தாய்நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன்னுயிரைத் தந்திட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகளின் அருந்தொண்டினைப் போற்றுகின்ற வகையிலும், அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் இம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மணிமண்டபத்தில் மாவட்ட வாரியாக விடுதலைப் போராட்டத் தியாகிகளின் ஒளிப்படங்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பில், தியாகிகள் மணிமண்டபம் 02.10.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தியாகிகள் மணிமண்டபம் முன்பாகத் தியாகி ஆர்யா எ பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோருக்கு மார்பளவுச் சிலைகள் அமைக்கப்பட்டு 17.07.1999 அன்று திறந்து வைக்கப்பட்டன. தியாகி செண்பகராமன் அவர்களின் திருவுருவச் சிலை தியாகிகள் மணிமண்டபம் முன்பாக அமைக்கப்பட்டு 17.07.2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. தியாகிகளைப் போற்றும் வகையில் சூலைத் திங்கள் 17 அன்று அரசின் சார்பில் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.