அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம்
எட்டயபுரம்
வணக்கம்!
துாத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தில் செய்கு முகம்மது அலியார் என்பவருக்கு அமுதகவி உமறுப் புலவர் 23.10.1642 அன்று மகனாகப் பிறந்தார்.
திண்ணைப் பள்ளி, ஏட்டுப் படிப்பு, ஆரம்பக் கல்வி பயின்ற உமறுப் புலவர் அதன்பின் அரசவைப் புலவர் கடிகை முத்துவிடம் சேர்ந்து இலக்கண, இலக்கிய, கவிநிகண்டு ஆகியன பயின்று முதன்நிலை மாணவரானார். பின்னர் எட்டயபுரம் மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராகப் பதவி வகித்தார்.
கல்விக்கடல் மகான் சதக்கத்துல்லா அப்பாவிடம் உரைபெற்று இறையருளாளர் முகமது நபி (ஸல்) நல்லாசியுடன் சீறாப்புராணம் எழுத ஆரம்பித்தார். உமறுப்புலவரைப் பரங்கிப்பேட்டை அழைத்துச் சென்று பின்னர்ச் சிறப்புடன் சீறாப்புராணம் எழுதி முடிக்கப்பட்டுப் பரங்கிப்பேட்டையிலேயே நூல் அரங்கேற்றம் நடத்தப்பட்டது. பின்னர், எட்டயபுரத்தில் 28.07.1703 அன்று நல்லடக்கமானார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி, எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம் 29.10.2007 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்தநாள் அக்டோபர்த் திங்கள் 23ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.