சுதந்திரப் போராட்ட வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம்

வல்லநாடு

வணக்கம்!

திருநெல்வேலி சீமை தந்த தீரம்மிக்க வீரன் வெள்ளையத் தேவன் அவர்கள் நெஞ்சுரமும், போர்த்திறனும், வெள்ளையத் தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைத்தளபதியாக மட்டுமல்லாமல், மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப் பாய்ந்தவர் வெள்ளையத்தேவன் ஆவார்.

பானர்மேன் என்ற ஆங்கிலப் படைத்தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தபோது அவர்களைத் தீரமுடன் எதிர்த்துப் போர்புரிந்த கட்டபொம்மனுக்கு உறுதுணை புரிந்தார். போர் முடிவுற்றது என்று எண்ணிக், கோட்டையின் மீது நின்று தன் படைகளுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்த வீரர் வெள்ளையத் தேவனை ஆங்கிலேய சிப்பாய் ஒருவன் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டதைச் சற்றும் எதிர்பாராத வெள்ளையத் தேவன் கோட்டையிலிருந்து விழுந்து வீரமரணம் அடைந்தார்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவன் மணிமண்டபம் 21.09.2007 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த மே திங்கள் 31 ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.