அல்லாள இளைய நாயகர் குவிமாடத்துடன் கூடிய திருவுருவச்சிலை

ஜேடர்பாளையம்,நாமக்கல் மாவட்டம்

வணக்கம்!

400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிப்புரிந்த சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர், அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் பேணும் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

விவசாயப் பயன்பாட்டிற்காக காவிரி ஆற்றின் அருகே அல்லாள இளைய நாயக்கரால் வெட்டப்பட்ட ராஜவாய்க்கால், இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.

எனவே, அவரது சிறப்பைப் போற்றும் வகையில் அவருக்கு நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் குவிமாடத்துடன் கூடிய திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி! வணக்கம்.