பெரியவர் எம்.பக்தவத்சலம் நினைவிடம்

சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, கிண்டி

வணக்கம்!

பெரியவர் எம்.பக்தவத்சலம் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நரசத் பேட்டையில் கனகசபாபதி முதலியார் மல்லிகா அம்மாள் இணையர்க்கு 09.10.1897 அன்று மகனாக பிறந்தார்.

மகாத்மா காந்தியடிகளின் உரையினைக் கேட்டு, சட்டக்கல்லூரி மாணவரான இவர் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்றார். சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள், திரு.வி.க.வின் தேசபக்தன் இதழில்

வெளியான கட்டுரைகளின் தாக்கம் போன்றவை இவரை விடுதலைப் போராட்டத்தில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டுகோலாக அமைந்தன.

காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். சிறந்த தேசியவாதி, நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். அண்ணல் காந்தியடிகள் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். 1946 மற்றும் 1954 ஆண்டுகளில் பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்தார். அதனைத் தொடர்ந்து 1963ஆம் ஆண்டு முதல் 1967 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 13.02.1987 அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் பெரியவர் எம்.பக்தவத்சலம் நினைவிடம் 13.03.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.

பெரியவர் எம்.பக்தவத்சலம் நினைவிடம்

பெரியவர் எம்.பக்தவத்சலம் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நரசத் பேட்டையில் கனகசபாபதி முதலியார் மல்லிகா அம்மாள் இணையர்க்கு 09.10.1897 அன்று மகனாக பிறந்தார்.