பாரத மாதா நினைவாலயம்

பாப்பாரப்பட்டி

வணக்கம்!

சாதி, மத வேறுபாடின்றி, மக்களுக்குச் சுதந்திர உணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் ஒன்றுபட்டு வழிபடும் வகையிலும் சமத்துவக் கோவில் ஒன்றினை அமைத்திட வேண்டுமென்பதே தனது இலட்சியமாகக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள். தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம், பாப்பாரப்பட்டியில் 'பாரதபுரம் எனப் பெயரிட்டு விளங்குகின்ற ஆசிரமத்தில் 1923ஆம் ஆண்டு தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் அவர்களால் பாரத மாதா ஆலயம் அடிக்கல் நாட்டப்பட்டது.

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் கனவினை நிறைவேற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம், பாப்பாரப்பட்டியில் நுாலகத்துடன் கூடிய பாரத மாதா நினைவாலயம் 01.08.2021 அன்று தமிழ்நாடு அரசால் திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.

பாரத மாதா நினைவாலயம்

பாட்டுடைத் தலைவன் மகாகவி பாரதியார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள் இணையர்க்கு 11.12.1882 அன்று மகனாகப் பிறந்தார்.