முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா நினைவு மண்டபம்
மெரினா கடற்கரை, காமராசர் சாலை
வணக்கம்!
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கருநாடக மாநிலம், மாண்டியா மாவட்டதில், ஜெயராம் - வேதவல்லி இணையர்க்கு 24.02.1948 அன்று மகளாகப் பிறந்தார்.
இவர் நுாற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துத், தென்னிந்தியத் திரைப்பட உலகில் சிறந்த புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்தார். 1984ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனுார்த் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகவும், 1991, 2001, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சராக 'மக்களால் நான் - மக்களுக்காகவே நான்' என்ற இலட்சியத்தோடு பணியாற்றித், தொட்டில் குழந்தைத் திட்டம்,மழைநீர் சேகரிப்புத் திட்டம், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்திட விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, ஏழைப் பெண்களின் திருமணத்திற்குத் தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம், அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 05.12.2016 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் நினைவாக சென்னை மெரினா கடற்கரை பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிட வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவிடம் 27.01.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த பிப்ரவரி திங்கள் 24ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.