பெருந்தலைவர் காமராசர் நினைவு இல்லம்

திருமலைச்சாலை, தியாகராயர் நகர்

வணக்கம்!

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுப்பட்டி என்ற விருதுநகரில் குமாரசாமி சிவகாமி இணையர்க்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த காலத்தில் கிராமங்கள் தோறும் தொடக்கப்பள்ளிகளைத் தொடங்கிவைத்து மதிய உணவுத் திட்டத்தை ஆரம்பித்துக் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார். வாய்மை, தூய்மை, நேர்மை, தொண்டாற்றல் போன்றவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்ததால் கருமவீரர் என்றும் பெருந்தலைவர் என்றும் மக்களால் போற்றப்படுகிறார்.

சென்னை தியாகராயர் நகர், திருமலைப்பிள்ளை சாலையில் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் வாழ்ந்த இல்லத்தினை 15.07.1978 அன்று முதல் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

பெருந்தலைவர் காமராசர் நினைவு இல்லம்

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுப்பட்டி என்ற விருதுநகரில் குமாரசாமி சிவகாமி இணையர்க்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார்.