திருப்பூர் குமரன் நினைவு மண்டபம்

திருப்பூர்

வணக்கம்!

கொடிகாத்த குமரன் என்று நம் அனைவராலும் போற்றிப் புகழப்படும் திருப்பூர் குமரன் அவர்கள் 04.10.1904 அன்று சென்னிமலையில் நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி இணையர்க்கு முதல் பிள்ளையாகப் பிறந்த இவரது இயற்பெயர் குமாரசாமி ஆகும்.

காந்தியடிகளின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டின் விடுதலைக்காக உத்தமர் காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

04.01.1932ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்ததன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் திருப்பூரில் போலீசாரின் தடையை மீறி 10.01.1932 அன்று தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் தன் கையிலிருந்த கொடியைத் தரையில் சாய விடாமல் 'வந்தே மாதரம்' என்ற முழக்கத்தை எழுப்பித் தன் நாட்டுப் பற்றினைப் பறைசாற்றி, 'சுயராஜ்யம் வராதா' என இறுதிச் சொற்களுடன் 11.01.1932 அன்று உயிர் நீத்தார். திருப்பூர் குமரன் நினைவாக 2007ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், திருப்பூர் இரயில் நிலையம் அருகில், குமரன் சாலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் 07.04.1991 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த அக்டோபர்த் திங்கள் 4ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

திருப்பூர் குமரன் நினைவு மண்டபம்

கொடிகாத்த குமரன் என்று நம் அனைவராலும் போற்றிப் புகழப்படும் திருப்பூர் குமரன் அவர்கள் 04.10.1904 அன்று சென்னிமலையில் நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி இணையர்க்கு முதல் பிள்ளையாகப் பிறந்த இவரது இயற்பெயர் குமாரசாமி ஆகும்.