பெருங்காமநல்லூர் நினைவு அரங்கம்
பெருங்காமநல்லூர், மதுரை மாவட்டம்
வணக்கம்!
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில இன மக்களை குற்றப் பரம்பரையினராக அறிவித்து, கைரேகைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நினைத்தால் எந்தவொரு சாதியையும் 'குற்றப்பரம்பரை' என்று அறிவிக்கலாம். தவறு செய்தால்தான் குற்றவாளிகள் என்பதெல்லாம் கிடையாது. அந்தச் சாதிகளில் பிறந்தவர்கள் எல்லோருமே 'பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம். தமிழ்நாட்டில் இச்சட்டத்தின்படி 89 சாதிகள் குற்றப்பரம்பரையாக அறிவிக்கப்பட்டன.
இந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் கடந்த 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி போராட்டம் வெடித்தது. அதை அடக்குவதற்காக ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 தியாகிகளை கௌரவிக்கும் வகையிலும், அந்நிகழ்வின் 100 ஆண்டு நினைவை குறிக்கும் வகையிலும் ரூ.1,47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்ட்டுள்ள பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் 14.02.2023 அன்று திறந்துவைக்கப்பட்டது.
நன்றி! வணக்கம்.