கி. ராஜநாராயணன் நினைவரங்கம்

கோவில்பட்டி,தூத்துக்குடி மாவட்டம்

வணக்கம்!

"கரிசல்காட்டு இலக்கியத்தின் " முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் இடைசெவல் கிராமத்தில் 16.09.1922ல் பிறந்தார்.

ஸ்ரீகிருஷ்ண இராமானுஜம் - லட்சுமிஅம்மாள் தம்பதியின் ஐந்தாவது மகனாக பிறந்தார்.

பேச்சுத்தமிழில் சாகாவரம் பெற்ற மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர்.

படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் சாகாவரம் பெற்றன.

இந்தமண்ணின் உழைப்பாளிகள். விவசாயிகள், பிஞ்சுக்குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதைமாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின.

1958 முதல் 2021 வரை இலக்கிய பணிசெய்துள்ளார்.

1991-ம் ஆண்டு "கோபல்லபுரத்து மக்கள்" என்ற நாவலுக்கு "சாகித்ய அகாடமிவிருது" பெற்றுள்ளார்.

2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

எழுத்தாளர் கி.ரா. அவர்கள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

இவரின் நினைவுக்கூறும் வகையில் 02.12.2022 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம் அமைப்பட்டுள்ளது.

நன்றி! வணக்கம்.

கி. ராஜநாராயணன் நினைவரங்கம்

"கரிசல்காட்டு இலக்கியத்தின் " முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு