இராபர்ட் கால்டுவெல் நினைவு இல்லம்

இடையன்குடி

வணக்கம்!

அயர்லாந்தில் பிறந்து சமயப்பணியினை மேற்கொள்ள இந்தியாவின் தென்பகுதியாம் நாகர்கோவிலுக்கு வருகைதந்து, தமிழ்மொழி மீது கொண்ட பற்றின் காரணமாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களை முழுமையாகக் கற்றறிந்ததோடு மட்டுமின்றி, முறையாக ஆய்வு செய்து அன்னைத் தமிழுக்கு அணிகலனாய் அரிய பல நூல்களைத் தந்திட்ட தமிழறிஞர் கால்டுவெல் அயர்லாந்து நாட்டில் கிளாடி என்ற சிற்றூரில் 07.05.1814 அன்று பிறந்தார்.

ஏறத்தாழ 50 ஆண்டுக் காலம் இடையன்குடியில் பணியாற்றிய காலத்தில் தமிழ்நாட்டைத் தனது உயிர்ப் பூமியாகக் கருதி இடைவிடாத மக்கள் சேவையிலும் தமிழ்ப் பணியினைத் தளராது தொடர்ந்தார். தமிழை முதன்முறையாகப் பிற மொழிகளுடன் ஒப்பீடு செய்த பெருமைக்குரியவர்.

1856ஆம் ஆண்டு "A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages” எனப்படும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலினை இயற்றினார். பேராயர் கால்டுவெல் அவர்கள் 1881ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட வரலாற்றினை எழுதினார். இஃது ஆற்றலுக்கும், பெருமைக்கும் அழியாத சின்னமாகத் திகழ்ந்தது.

28.08.1891 அன்று 'திராவிட மொழியியலின் தந்தை' என்றழைக்கப்படும் இராபர்ட் கால்டுவெல் இயற்கை எய்தினார். அன்னாருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியில் இராபர்ட் கால்டுவெல் நினைவாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு இல்லம் 17.02.2011 அன்று திறந்து வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த மே திங்கள் 7ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.