வள்ளுவர் கோட்டம்

நுங்கம்பாக்கம்

வணக்கம்!

அகிலம் போற்றும் திருக்குறளை இயற்றிய வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியில் சென்னையில் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் 15.4.1976 அன்று திறந்து வைக்கப்பட்டது.

காண்போர் கருத்தைக் கவரும் வண்ணம் காந்தாரக் கலை வடிவில் தோரணவாயில் அமைக்கப்பட்டு முகப்பில் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற முதல் குறள் பொறிக்கப்பட்டுள்ளது.

கருவறையின் இருபகுதிகளிலும் 2 அடி உயரமுள்ள பீடத்தின் மேலே முப்பாலைக் குறிக்கும் வண்ணம் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் 7 அடி உயரமுள்ள ஒளிமிக்க அய்யன் திருவள்ளுவர் சிலை கம்பீரமாய் அமைக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற ஆழித் தேராம் திருவாரூர்த் தேரையே அசலாக வள்ளுவர் கோட்டத்தில் அமையப் பெற்றது காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுத்து, ஓங்கி உயர்ந்து நிற்கும் அழகுச் சிற்பத் தேர் என்றால் அது மிகையில்லை.

நன்றி! வணக்கம்.