வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம்

சூரக்குளம்

வணக்கம்!

'விளையும் பயிர் முளையிலே தெரியும் என்கிற பழமொழிக்கேற்ப, வீரம் என்ற மூன்றெழுத்தை மட்டுமே அறிந்தவராய், பயம் என்கின்ற சொல்லை அறியாதவராய்த் திகழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் நாச்சியார் இணையர்க்கு 1730ஆம் ஆண்டு மகளாகப் பிறந்ததார்.

கூர்த்த மதிநுட்பமும், அனைத்துப் போர்க்கலைகளையும் கற்றறிந்து ஆங்கிலேயரை ஆயுதம் ஏந்தித் தீரத்துடன் எதிர்த்துப் போராடிய முதல் தமிழ்ப் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார். 1772ஆம் ஆண்டு எதிர்பாராத தாக்குதலால் தன் கணவராம் மன்னர் முத்துவடுகநாதரைப் பறிகொடுத்தும் கலங்கிடாத உறுதிகொண்ட நெஞ்சுடன் மருது சகோதரர்கள் ஆதரவுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். பின்னாளில் ஹைதர்அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியோடு ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டுச் சிவகங்கையை மீட்டார். இந்திய வரலாற்றில் ஜான்சி ராணி (கி.பி.1835- 1858) காலத்திற்கு முன்னரே தனித்துவம் மிக்க தமிழ்ப்பெண்ணாய் வீரமங்கை வேலுநாச்சியார் தம் படைப்பிரிவில் பெண்களுக்கென்று தனிப்படையையும் உருவாக்கிப் போரினை எதிர்கொண்டார். 10 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1896 அன்று இயற்கை எய்தினார்.

இந்திய விடுதலை இயக்கத்தின் வீரம் செறிந்த வரலாற்றில் இந்த வீரமங்கைக்கு ஈடான வீராங்கனையைக் காண்பதற்கு இல்லை. அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் 18.07.2014 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த சனவரித் திங்கள் 3 ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.