வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம்
சிவகங்கை
வணக்கம்!
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரத்தாய் குயிலி ஆவார். இவர் சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராகவும், பெண்கள் படைப்பிரிவிலும் இருந்தார்.
மருது சகோதரர்களுடன் வீரர் படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். அப்போரில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டதோடு, தன் உடலில் எரிநெய்யை ஊற்றித் தானே மனித வெடிகுண்டாக மாறி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கினை அழித்திட்ட வீரதீர மங்கையாவார். 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்பதற்கு வீரத்தாய் குயிலி ஆற்றிய பங்கு வரலாற்றில் நிலைத்து நின்று அவரது புகழைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
இவ்விரு வீராங்கனைகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலியின் நினைவுச் சின்னம் 18.07.2014 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நன்றி! வணக்கம்.