பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு விழா நினைவுத் தூண்
விருதுநகர்
வணக்கம்!
வாய்மை, தூய்மை, நேர்மை இம் மூன்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த கருமவீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி சிவகாமி அம்மையார் இணையர்க்கு 15.07.1903ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரராய் 9 ஆண்டுக்கால ஆட்சிப் பணியில் மக்களின் முதல்வராக, மாணவர்களின் கல்விக்கண் திறந்தவராக, கல்வி, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறிட முனைப்புடன் திட்டம் வகுத்துச் செயற்படுத்திய செயல்வீரராக, இறக்கும் வரையிலும் மக்களின் நலன்குறித்துச் சிந்தித்து வாழ்ந்த பெருந்தலைவர் மறைந்தாலும், மக்களின் மனங்களிலெல்லாம் மறவாமல் போற்றப்படுகிறார்.
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அருமை பெருமைகளைப் போற்றிடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அவர் வாழ்ந்த இல்லம் 15.01.1975 அன்று முதல் அரசுடைமையாக்கப்பட்டு, அன்னாரின் நூற்றாண்டு நினைவாக, காமராசர் மணிமண்டபத்தில் 01.03.2006 அன்று திறந்து வைக்கப்பட்டது.
நன்றி! வணக்கம்.