பேரறிஞர் அண்ணா

வணக்கம்!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டை தமிழக மக்களிடையே விதைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிகுந்த பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல்வாதியாகவும் , உத்தம தலைவராகவும் திகழ்ந்தார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தன் தலைவராக ஏற்றுக் கொண்டார்.

தாய்மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட நமது மாநிலத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். 1968 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்தை வழங்கி தமிழக முன்னேற்றத்துக்கு சிறப்புற செயல்பட்டார். “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு பட்டவர். சொல்லாலும் எழுத்தாலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலை, டாக்டர் சர்.ஏ.இராமசாமி அவர்களால் 01.01.1968 அன்று சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.