முத்தமிழறிஞர் கலைஞர்
வணக்கம்!
தமிழகத்தின் தனி பெருந்தலைவராக, இந்திய திருநாடே வியந்து போற்றும் மிகச் சிறந்த அரசியல் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார். ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளுக்கு ஏற்ப உலகெங்கும் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருப்பவர்.
தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு முத்திரையை பதித்தவர். எண்பது ஆண்டு கால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்பு தம்பியாக திகழ்ந்தார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களால் அறிவில் சிறந்தவர், நிருவாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்வதிலும் சிறந்தவர் என்று போற்றப்பட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று எண்ணற்ற பல சமூக நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி தமிழகத்தை தலைநிமிரச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆவார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அவர்களால் 28.05.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.
நன்றி! வணக்கம்.