தந்தை பெரியார்
வணக்கம்!
மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டு சாதி ஒழிப்பு , பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்காக தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள்.
1927 ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமை எதிராகப் போராடி வைக்கம் வீரர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதை கொள்கைக்காகவே வாழ்ந்தவர். படிப்பறிவு மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெற முடியும் என்பதை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.
தமிழனத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்டு சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி போன்ற அடிப்படை கொள்கைகளால் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.
பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலை முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்களால் 17.09.1974 அன்று திறந்து வைக்கப்பட்டது.
நன்றி! வணக்கம்.